துப்பதட்டியும், லிப்பி இலை தேனீரும்! - Yatra Day #2 reflection

from the Yatra Arachalur Selvam --
தாம்பட்டி....சின்ன கிராமம்...தமிழக கிராமங்களின் யதார்த்த நிலைமைக்கு அடையாளம். அந்த யதார்த்த நிலையை அறிவதற்கு முன் தாம்பட்டிக்கேயான தனித்துவங்கள் சொல்வது அவசியம்.
100 குடும்பங்கள் இருந்தன. எல்லாமே விவசாயக் குடும்பங்கள். உருளைக் கிழங்கை ஆங்கிலேயர் அறிமுகம் செய்தனர்.
அதற்கு முன்பு வரை அங்கு விளைவிக்கப்பட்டவை கேழ்வரகு, சாமை, சம்பா கோதுமை. எருமைகள் வளர்த்தனர்.
இப்போது கேரட், பீட்ரூட், சீன கீரை வகைகள், முட்டை கோசு, காலி பிளவர்.
தமிழகத்தில் ஸ்ட்ரா பெரியை வளர்த்தவர்களும் தாம்பட்டி கிராமத்தவர்களே.
கோதுமை மாவும் எருமை நெய்யும. கொண்டு ஒரு மிகச் சுவையான இனிப்பு ஆப்பம் - (துப்பதட்டி அதன் பெயர்) அவர்களது மரபு உணவுகளில் ஒன்று. மாலைக் கூட்டத்தில் வழங்கினர் லிப்பி இலை டீயுடன்
லிப்பி இலையால் தயாரித்த இந்த பானம் வரு சுகானுபவம். மிக மென்மையான சுவை, மணம். பார்க்க எலுமிச்சை சாறு போல் இருக்கிறது. குடித்தால் ம்ம்ம்ம்ம்ம்ம் .... ஒரு்தனி சுகம்...நிதானமாக இரசித்து குடிக்க வேண்டும் அதுவும் தேவராஜ் ன் இணையரின் கைப் பக்குவத்தில்
ஆகா மிக அற்புதமான சுவை, (மிகவும் சுவையான ஒன்றை இதயம் ரசித்துவிட்டால் வெட்கம் துறந்து கேட்டு வாங்கி சுவைக்கச் செய்யும் மனது என்பது இயல்பு தானே). ஒன்று, இரண்டு, மூன்று என ஒவ்வொருவரும் கேட்டு வாங்கிச் சுவைத்தனர்.
வீட்டிற்கு வீடு எருமைகள் பல இருந்த ஊரில் எருமைகளே இல்லை. கப்பலில் வந்திறங்கிய ஜெர்சி வகைகளே இருக்கின்றன. ஒரு வீட்டில் உள்ளே நுமைந்ததும் கதவிற்கு நேர் எதிரே
இருந்த உள் கதவின் மேல் சுவற்றில் இருந்த படத்திற்கு பொட்டு வைத்து பூவும் வைத்திருந்தனர்.
அந்தப் படத்தில் இருந்தது ஒரு ஜெர்சி மாடு. அந்த வீட்டுத் தலைவியிடம் லேசாக பேச்சு கொடுத்த போது சொன்னார். "இவள் எங்கள் குடும்பத்தில் ஒருத்தி. 8 கன்றுகள் ஈன்றாள்," என்று பெருமையாகவும் லேசான இழப்பின் வருத்தத்தோடும் கூறினார்.
தனியே ஒரு புகைப்படம் எடுத்து ஒரு கடவுள் படத்தோடு சேர்த்து மாட்டி வைத்திருப்பது அவர்கள் எந்த அளவு தங்களது உணர்வோடு பிணைந்திருக்க வேண்டும்.
மலைப் பகுதி மக்கள் (எல்லா மலைப் பகுதியிலும்) உணர்வுப் பிணைப்போடே சக மக்களிடமும், வளர்ப்பு உயிரினங்களோடும் இருப்பர்.
இவர்களது விருந்தோம்பல் மிகவும் சிறப்பாக இருக்கும். வலிந்து வலிந்து உண்ண வைப்பர்.இங்கு அப்படித் தான் நடந்தது துப்பதட்டி கிராமத்தில்.

ஊரின் மையப் பகுதியில் பொது சமுதாயக் கூடம். அருகேயே ஒரு கோயில். அதனருகே ஒரு கம்பத்தில் மூவண்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது.
சூரியன் கவிந்து கொண்டிருக்கும் நேரம். கொடிக் கம்பத்தடியில் இருந்த ஒரு அன்னிய மரத்தை நாடி அணியணியாக சிட்டுக் குருவிகள் இரவைக் கழிக்க வந்து கொண்டிருந்திருந்தன. சிட்டுக்குருவிகளின் குதுகூலக் கூச்சல் மரத்திற்குள்ளிருந்து.
இரு மூத்த குடியினர் கொடியை இறக்கிக் கொண்டிருந்தனர். மூவண்ணக் கொடியை எப்படி மடிக்கிறார்கள் என ஒரு குறுகுறுப்பான உணர்வோடு கவனித்துக் கொண்டிருந்தேன்.

இராணுவத்தினர் மடிப்பது போலவே மடித்தனர். நூல் கயிற்றை அகற்றிவிட்டு நைலான் கயிற்றை ஏற்றிக் கொண்டிருந்தனர்
கோயிலுக்குள் அழைத்து சென்றார் அந்தப் பெரியவர். கருவறையைப் பாருங்கள் என்றார். சாமி சிலைகளுக்குக் கீழே காந்தி தனது பொக்கை வாய் சிரிப்போடு சிரித்துக் கொண்டிருந்தார்.
காந்தியையும் நாங்கள் கும்பிடுகிறோம். சுற்றில் பல இந்துக் கடவுள்கள் அவைகளோடு மெக்காவின் மசூதியும், ஏசுவும் இருந்தார்.
இந்தக் கோயில் கட்ட ஒரு பாபா நிதி உதவி செய்தார். எங்கள் ஊருக்குள் மத பேதமில்லலை. இசுலாமியர் குடும்பங்கள் இங்கு இல்லை. சில கிருத்துவ குடும்பங்கள் இருந்தன. இப்போது இல்லை. எவ்வித. பேதங்களும் இல்லாமல் வாழ்கிறோம். இங்கே சண்டை சச்சரவுகளும் ரொம்ப குறைவு என்றார்.
கொட்டிக் கம்பம் இருந்த இடத்தில் சிறு சுவற்றில் காந்தி பஜனை சபா என்று காரையால் எழுதிஇருந்தது.
கொடியை இறக்கியவர் கிருஷ்ணன் ராஜ்.18 வயதில் பட்டாளத்தில் சேர்ந்தார். இரண்டு போர்களில் களமாடிவர்.இப்போது வயது 84.தாம்பட்டி கிராமத்தின் ஊர்த் தலைவர்.
எங்கோ ஒரு மலைக் குக்கிராமத்தில் காந்தி கடவுளாக இன்னமும் மதிக்கப்படுகிறார். காந்தி கடவுளாக்கப்பட்டது சரியா? காந்திய முறை வாழ்வு இருக்கிறதா எனக் கேள்வில் எழலாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
எங்களுக்கு உணர்வுப் பூர்வமாக. இருந்தது காந்தி இன்னமும் மதிக்கப்படுகிறார் என்பதே.
உண்மையான காந்தியம் இங்கே வந்திருந்தால் என்ற கேள்வியை விட முக்கியமான. கேள்வியாகப்பட்டது காந்தியர்கள் ஏன் காந்தியை இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவராக மட்டும் நிலை நிறுத்தி விட்டனர் என்பதே.
தாம்பட்டி என்னுள் எழுப்பிய சில கேள்விகளில் இது முக்கியமானது.
சந்தோசப்படுவதற்கானது ஒரு அதிகம் வெளி உலகிற்குத் தெரியாத ஒரு மலைக் குக்கிராமத்தில் காந்தி மதிக்கப்படுகிறார், 2 இயற்கை விவசாயிகள் மற்றவர்களின் ஏளனங்களுக்கிடையே் எழுந்து வளர்ந்திருக்கின்றனர்.
சிவக்குமார் மற்றும் தேவராஜ் தான் அவர்கள்.


Comments